காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்.. பிரேசலில் பயங்கரம்.. வைரல் வீடியோ!

 
Brazil

பிரேசிலில் இளம் பெண் ஒருவர் தனது காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் டியாகோ பொன்சேகா (27) என்ற இளைஞன் ஜன்னலுக்கு அருகில் நின்று தனது 23 வயதான காதலி ஜல்லி ஆல்வ்ஸை நோக்கி தங்க நிற துப்பாக்கியால் சுட்டியுள்ளார். அப்போது ஆல்வ்ஸ் தனது காதலனிடம் சிரித்துக் கொண்டே செய் என்று கூறியுள்ளார்.

இது அனைத்தும் ஆல்வ்ஸ் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதையடுத்து, காதலன் பொன்சேகா, தனது காதலியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், பொன்சேகாவிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேர் தங்களை இழுத்து சென்றதாகவும், அதில் ஒருவன் ஆல்வ்ஸைத் தாக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டதாக கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

விசாரணையில் பொன்சேகா கூறியதில் முரண்பாடு இருப்பதால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் ஆல்வ்ஸின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், அதில் துப்பாக்கிச் சூட்டின் வீடியோவைக் கண்டுபிடித்தனர்.

Brazil

பின்னர் கொலைக் குற்றச்சாட்டில் பொன்சேகா கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு வெளியே அவர் காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகிலேயே, ஆல்வ்ஸை சுட பயன்படுத்திய 380 கலிபர் ரக துப்பாக்கியை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web