காதலை வெளிபடுத்திய காதலன்.. கொண்டாட மலை உச்சிக்கு சென்ற காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!

 
Yesim Demir

துருக்கியில் காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில், அதனை கொண்டாடுவதற்காக மலை உச்சிக்கு சென்ற இளம்பெண்ணின் விபரீத முடிவு நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கியின் வடமேற்கே போலண்ட் கேப் பகுதியைச் சேர்ந்தவர் நிஜாமதீன் குர்சு. இவர் எசிம் டெமிர் (39) என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து, சமீபத்தில் இந்த காதல் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை கொண்டாடுவது என முடிவு செய்து அவர்கள் இருவரும் மலை பகுதிக்கு காரில் சென்றனர். பின்பு மலை உச்சிக்கு ஏறி சென்ற அவர்கள் உணவு மற்றும் மதுபானம் குடித்து கொண்டாடியுள்ளனர்.

Turkey

இதையடுத்து, சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்து குர்சு தனது காருக்கு திரும்பியுள்ளார். ஆனால், அவரது காதலி டெமிர் அவருடன் வரவில்லை. அப்போது, திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதனால், உடனடியாக அவர் மலை பகுதிக்கு ஓடினார். அவரது வருங்கால மனைவி மலையின் 100 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனால் குர்சு அதிர்ச்சியானார். எனினும், படுகாயங்களுடன் போராடி கொண்டிருந்த டெமிர் உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து குர்சு கூறுகையில், காதல் செய்வதற்கான சிறந்த இடம் என தேர்வு செய்து மலை பகுதிக்கு சென்றோம். காதலை தெரிவித்த பின்பு, அது காலத்திற்கும் ஒரு நினைவாக இருக்க வேண்டும் என விரும்பி மலை உச்சிக்கு சென்றோம். பின்னர் இருவரும் மதுபானம் குடித்தோம். திடீரென, காதலி சமநிலை தவறி விழுந்து விட்டார் என வருத்தத்துடன் கூறினார்.


இதனை தொடர்ந்து, அந்த பகுதியை தடை செய்து, மூடிய காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது, சூரிய மறைவை காண்பதற்காக அனைவரும் வந்து, செல்ல கூடிய பகுதி. எனினும், இதற்கான சாலைகள் மிக மோசமடைந்து காணப்படுகின்றன. மலை உச்சியில் தடுப்புகளும் இல்லை. இந்த பகுதியில் வேலி அமைக்க வேண்டும் என டெமிரின் நண்பர்கள் கூறுகின்றனர்.

From around the web