சிறுமியிடம் தகாத உறவு வைத்திருந்த கணவர்.. மயக்க மருந்து கொடுத்து மர்ம உறுப்பை அறுத்த மனைவி.. பிரேசிலில் பயங்கரம்!

 
Brazil

பிரேசிலில் உறவுக்கார சிறுமியிடம் தகாத உறவு வைத்திருந்த கணவருக்கு மயக்க மருந்து கொடுத்து மனைவி மர்ம உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சாவ் பாலோவிற்கு அருகே அதிபாயா பகுதியில் வசித்து வருபவர் 39 வயது ஆண். திருமணமான இவருக்கு 35 வயதில் மனைவி உள்ளார். இந்நிலையில் தான் அந்த ஆண், அவரது உறவுக்கார 15 வயது சிறுமியிடம் தவறாக பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த உடலுறவு குறித்து அவரது மனைவிக்கு தெரியவந்தது. மேலும் அவர் கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து தனது கணவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்த அவர், இதற்காக கணவரின் மர்ம உறுப்பை வெட்டிவிட வேண்டும் என திட்டமிட்டார். இதற்காக அவர் தனியே திட்டம் ஒன்றையும் போட்டு வைத்தார். அதன்படி கணவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவர் மயங்கிய பிறகு மர்ம உறுப்பை வெட்ட திட்டமிட்டார். திட்டமிட்டபடியே அவர் தனது கணவருக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்தார்.

Private parts

அதனை சாப்பிட்ட கணவர் மயங்கவே மனைவி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவரது மர்ம உறுப்பை வெட்டினார். அதன் பிறகு கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய நிலையில் அதனை செல்போனில் போட்டோ எடுத்து வைத்து கொண்டார். பிறகு அந்த மர்ம உறுப்பை அவரது மனைவி கழிவறையின் உள்ளே போட்டுவிட்டு தண்ணீரை ஊற்றினார்.

இந்நிலையில் தான் மயக்கம் தெளிந்த நிலையில் அவரது கணவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தால் வலியால் துடித்தார். மனைவியால் தனக்கு நேர்ந்த கொடுமையை அருகே உள்ளவர்களிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

women-arrest

இதற்கிடையே அவரது மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் உறவுக்கார சிறுமியுடன் உறவு வைத்திருந்ததால் மயக்க மருந்து கொடுத்து அவரது மர்ம உறுப்பை வெட்டினேன். மேலும் அந்த உறுப்பை வைத்திருந்தால் அவர் மருத்துவ சிகிச்சை மூலம் மீண்டும் அதனை சேர்த்து விட முடியும். இதனால் தான் கழிவறையின் உள்ளே போட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web