வளர்ந்து கொண்டே இருக்கும் தலை.. பிறவிலேயே விநோத நோய்.. 29 ஆண்டுகளாக குழந்தைபோல் பார்த்துக்கொள்ளும் தாய்.!

 
Brazil

பிரேசிலில் பிறவிலேயே விநோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் குழந்தையை அவரது தாய் 29 வருடங்களாக கவணித்து வருகிறார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வசித்து வருபவர் அடல்கிசா சோரெஸ் ஆல்வ்ஸ். இவருக்கு மூன்று மகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் கிரேசிலி ஆல்வ்ஸ் ரெஜிஸ். இவர் கருவில் இருக்கும்போது விநோதமான நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்த பின்னர், அவரின் தலை மட்டும் பெரியதாக வளர்ந்துகொண்டே இருந்துள்ளது. 

Brazil

இந்த நிலையில், அவருக்கு ஹைட்ரோகெபாலஸ் (hydrocephalus) என்ற நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. அதாவது இந்த நோய் பாதிக்கப்பட்டிருந்தால், மூளையில் ஒருவிதமான திரவம் சுரந்துகொண்டே இருக்கும். அதனால் தலை அபரிவிதமான வளர்ச்சியடையும். கிரேசிலி தற்போது 29 வயது ஆகும் நிலையில், அவரால் நடக்க முடியாது, படுத்தப்படுக்கையாக இருக்கிறார். 

மேலும், அவருக்குக் கண்களும் தெரியாது, பேசவும் முடியாது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 1 அல்லது 2 வருடம் வரையே உயிருடன் இருந்த நிலையில், இவரின் தாயின் அரவணைப்பினால் 29 வருடங்கள் முடிந்து 30 வருடங்கள் தொட உள்ளார். தனது மகள் படுத்தப்படுக்கையாக இருப்பினும் அவரை பெரிய குழந்தையாகவே தான் பார்த்துக் கொள்வதாக அவரின் தாய் கூறுகிறார். 

“கிரேசிலியை அனைவரும் பெரிய தலை குழந்தை என்று அழைக்கின்றனர். அதனை நான் தவறாகப் பார்ப்பது இல்லை, ஏனென்றால் குழந்தை என்பதே ஒரு மகிழ்ச்சியான வார்த்தை தான். ஆனாலும் சில நேரங்களில் வருத்தமாகவே உள்ளது” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறியுள்ளார். யாராக இருப்பினும் தாயாக வரமுடியாது என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

From around the web