2 காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய காதலி.. யார் தந்தை என்பதில் குழப்பம்! வைரல் வீடியோ

 
Pregnant

காதலி தனது இரு காதலர்களுடன் வளைகாப்பு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்தரித்தல் என்பது ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் ஆவலுடன் காத்திருக்கும் மகிழ்ச்சியான தருணமாகும். இந்த அனுபவத்தை அந்த பெண் முதலில் தனது கணவரிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புவார். அதே போல் தந்தையும் குழந்தையின் வளர்ச்சியை கேட்டு அறிந்து கொள்வதில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார். 

Pregnant Mother

ஆனால் தன் குழந்தைக்கு தந்தை யார் என்று தெரியாத பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? ஆம், அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த பெண்ணுடன் இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள். மூவரும் மிகவும் ஜாலியாக நடனமாடுகிறார்கள். அந்த பெண் கருவுற்றிருப்பதால் மூவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உண்மையில், அந்தப் பெண் வீடியோவில் தன்னுடன் இருக்கும் இருவருடனும் உறவு வைத்து இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்கு தந்தை யார் என்பதில் அவருக்கு குழப்பம். ​​​​அந்தப் பெண் இருவருடனும் டேட்டிங் செய்தது இரு ஆண்களுக்கும் தெரியும் என்று தெரிகிறது.

A post shared by Sara (@starringsara)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இதற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது அவருடைய வாழ்க்கை என்று ஒருவர் எழுதினார். பரஸ்பர புரிதலுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பலர் கேலியும் செய்தனர். டிஎன்ஏ சோதனையில் இருவரும் குழந்தைக்கு தந்தையாக இல்லை என்றால் என்ன செய்வது? என்ற ரீதியிலும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

From around the web