160 கிலோமீட்டர் வேகத்தில் பறந்த கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. அனாதையான தமிழ் சிறுவன்!

 
Texas

அமெரிக்காவில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி தமிழர்களான ஒரே குடும்பத்து 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் லியாண்டர் பகுதியில் வசித்து வந்தவர் அரவிந்த் மணி (45). இவரது மனைவி பிரதீபா அரவிந்த் (40). இந்த தம்பதிக்கு ஆண்ட்ரில் அரவிந்த் (17) என்ற மகளும் அதிரியன் (14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், அரவிந்த் அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவருமே புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 5.45 மணியளவில் சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

சம்பவத்தின் போது உடன் பயணிக்காத அதிரியன் என்பவர் அந்த குடும்பத்தில் எஞ்சியுள்ள ஒரே ஒருவர். இந்த நிலையில் அந்த சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடன் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுவரை 7 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dead-body

சம்பவத்தன்று வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா தம்பதியின் கார் எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கியுள்ளது. சமீபத்தில்தான் பள்ளி கல்வியை முடித்து டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் சேர முடிவு செய்து, கல்லூரிக்கு தமது பெற்றோருடன் புறப்பட்டுள்ளார் ஆண்ட்ரில் அரவிந்த்.

இந்த விபத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு உள்ளிட்டவையை ஆய்வு செய்தால், இப்படியான ஒரு மோசமான சாலை விபத்தை கடந்த 26 ஆண்டுகளில் தாம் பார்த்ததில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Texas police

மட்டுமின்றி, முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய வாகனமானது கண்டிப்பாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறந்திருக்க வேண்டும் என்றும் அதனாலையே மோதிய வேகத்தில் நெருப்பு கோளமாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விபத்தை நேரில் பார்த்த டிரைவர் ஒருவரும் அந்த வாகனத்தின் வேகத்தை உறுதி செய்துள்ளார். பிரதீபா அரவிந்த் தமிழ்நாட்டின் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது.

From around the web