பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து... 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி!

 
Nepal

நேபாளத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சில் இருந்து காத்மாண்டுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பாலத்தில் இருந்து ராப்தி ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.

Accident

இந்த கோர விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் 8 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த யோகேந்திரராம் (67) மற்றொருவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முனே (37) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு நேபாள் கஞ்சில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Nepal

மேலும் போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web