திடீரென இடிந்து விழுந்த பாலம்.. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட லாரி.. வைரல் வீடியோ

 
Vietnam

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று இடிந்து விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி புயல் கடந்த சனிக்கிழமை அன்று வியட்நாமை தாக்கியது.  வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங்க் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கிமீ வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

Vietnam

கடந்த 30 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல் இதுவாகும். இந்த புயலால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று இடிந்து விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


19 வினாடிகள் ஓடும் வீடியோவில், பாலத்தில் லாரி ஒன்று மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், பாலம் இடிந்து விழுவதை பார்த்து சுதாரித்துக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

From around the web