டிவைடரில் மோதி தீப்பிடித்த டெஸ்லா கார்.. 4 இந்தியர்கள் பரிதாப பலி.. கனடாவில் சோகம்

கனடாவில் டிவைடரில் மோதிய டெஸ்லா எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் டொராண்டோ பகுதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கேட்டா கோஹில் (30) மற்றும் நில் கோஹில் (26) ஆகியோர் மேலும் 2 நபர்களுடன் டெஸ்லா எலக்ட்ரிக் காரில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் பயணம் செய்த டெஸ்லா கார் டிவைடரில் வேகமாக மோதியுள்ளது. அதனால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது. இதனால் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக காரின் கண்ணாடிகளை உடைக்க சிலர் முயன்றதாக இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்வப்ம பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.