தேவாலயத்தில் பயங்கர துப்பாக்கி சூடு... 7 பேர் பலி! ஜெர்மனியில் பயங்கரம்!!

 
Germany

ஜெர்மனியில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த தேவாலயத்தில் பிரார்த்தனை,ஆலோசனை கூடம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இந்த தேவாலயத்திற்குள் நேற்று இரவு 9.15 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

Germany

இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


முதல் தகவல் அறிக்கையின் படி, கிராஸ்போர்ஸ்டெல் மாவட்டத்தின் டீல்போஜ் தெருவில் உள்ள ஒரு தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், இதில் பலர் பலத்த காயமடைந்து இருப்பதுடன், 7 உயிரிழந்து இருப்பதாகவும் ட்விட்டரில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web