4 ஆண்டு பதவிக்காலம்.. 532 நாட்கள் விடுமுறை எடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

 
Joe Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்று குடியரசுக் கட்சியின் RNC ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள்.

Biden

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்று குடியரசுக் கட்சியின் RNC ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும். ஒரு சராசரி அமெரிக்க அரசு ஊழியர் 48 வருடத்திற்கு எடுக்கக்கூடிய விடுமுறையை பைடன் 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Joe Biden

அமெரிக்காவில் ஒரு அரசு ஊழியர் வருடத்திற்கு 10 முதல் 14 நாட்கள் மட்டும் தான் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது பதில் அளித்த வெள்ளை மாளிகை விடுமுறையின் போதும் பைடன் தனது அதிபர் கடமைகளில் தீவிரமாக ஈடுபடுவதாகக் கூறியது.

From around the web