மாந்திரீகம் செய்வதற்காக பெற்ற தாயின் உடலை கூறு போட்ட இளம்பெண்.. அமெரிக்காவில் பயங்கரம்

 
Kentucky

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் மாந்திரீகம் செய்வதற்காக பெற்ற தாயைக் கொன்று அவரது உடலை கூறுபோட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த டோரிலினா ஃபீல்ட்ஸ் (32) என்னும் பெண், தனது தாயைக் கொன்று அவரது உடலைக் கூறுபோட்டு, அவரது உடல் பாகங்களை தனது வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் வீசியுள்ளார். டோரிலினா மாயமந்திரம், சூனியம் போன்ற விசயங்களில் ஆர்வம் காட்டி வந்ததால், அவரது தாய் ட்ரூடி ஃபீல்ட்ஸ் அவரைக் கண்டித்துள்ளார்.

Kentucky

ஆகவே, தன் தாயையும் கொலை செய்து அவரது உடலைக் கூறுபோட்டு வீசியுள்ளார் டோரிலினா. சமீபத்தில் ட்ரூடியை சந்தித்த ஒருவரிடம் தன் மகள் செய்யும் பயங்கர விடயங்கள் குறித்து ஏற்கனவே அவர் கூறியிருந்த நிலையில், அதனால்தான் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து, அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் டோரிலினா வீட்டுக்கு வர, அவர் வீட்டுக்குள் பதுங்கியுள்ளார். பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீட்டுக்குள் வீசி அவரை வெளியே வரவைத்த போலீசார், உடல் முழுவதும் இரத்தத்துடன் காணப்பட்ட டோரிலினாவை கைது செய்துள்ளார்கள்.

அவரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web