பள்ளி மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Delaware

அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் செயிண்ட் மேரி மேக்டலின் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அலேனிஸ் பினியன்(24). இவர் தன்னிடம் பயிலும் மாணவர்களுடன் சமூக வலைதளங்களில் சாட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

Delaware

இந்த நிலையில், ஆசிரியை அலேனிஸ் பினியன் ஒரு மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி அலேனிஸ் பினியனை கைது செய்தனர். 

jail

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ஆசிரியை அலேனிஸ் பினியன் ஒப்பந்த அடிப்படையில் தங்கள் பள்ளியில் பணியாற்றி வந்ததாகவும், தற்போது அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பையே முதன்மையாக கருதுவதாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

From around the web