அடக்கருமமே.. வயதாவதை தடுக்க மலத்தை முகத்தில் பூசிக்கொண்ட இன்ஸ்டா பிரபலம்!

 
Brazil

வயதாவதை தடுக்க வேண்டும் என்பதற்காக தனது மலத்தை எடுத்து முகத்தில் தடவி பிரேசில் நாட்டை சேர்ந்த இன்ஸ்டாகிராமின் பெண் பிரபலம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலை சேர்ந்தவர் டெபோரா பெய்க்ஸோடோ (31). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகு குறிப்புகள் தொடர்பான அட்வைஸ் மற்றும் அதுதொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 6.58 லட்சம் பேர் பின்தொடர்நது வருகின்றனர். 

இந்த நிலையில் தனா் டெபோரா பெய்க்ஸோடோ பதிவேற்றும் வீடியோக்கள் அடிக்கடி சர்ச்சையை கிளப்பும். அந்த வகையில் தான் தற்போது அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று முகம் சுழிக்க வைத்துள்ளது. அதாவது எப்போதும் இளமையாக இருக்க மனித கழிவை முகத்தில் பூசினால் போதும். முகத்தில் பொலிவு அதிகரித்து வயதாவதை தடுத்து எப்போதும் இளமையாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். 

Mask

அதுமட்டுமின்றி அவர் அதனை செய்து வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், டப்பாவில் இருக்கும் அவரது கழிவை எடுக்கும் டெபோரா பெய்க்ஸோடா முகம் முழுவதும் ‛அப்ளை’ செய்து நன்கு தேய்க்கிறார். அதன்பிறகு சிறிது நேரத்தில் அவர் முகத்தை கழுவ பொலிவுடன் காணப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்த வீடியோ பதிவில் அவர், “நான் செய்த பைத்தியக்காரத்தனமான விஷயங்களில் இதுவும் ஒன்று. மாதவிடாய் ரத்தத்தை தோல் பொலிவுக்கு பயன்படுத்தினேன். மலத்தை முகத்தில் தடவுவதன் மூலம் வயதாவதை தடுக்கலாம் என்பதை ஆன்லைனில் படித்தேன். இதனால் இந்த முயற்சியை மேற்கொண்டேன். இது முகத்தில் நல்ல மாற்றத்தை தந்துள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இப்படி செய்வதால் உடல்நலத்துக்கு பலன் எதுவும் கிடைக்காது. மாறாக உடல்நலத்துக்கு பிரச்சனை தான் ஏற்படும். இதுபோன்ற பொய்யான தகவல்களை பொதுவெளியில் கூற வேண்டாம் என்று பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து லண்டனில் உள்ள கடோகன் கிளினிக்கின் ஆலோசகரான தோல் நோய் மருத்துவர் சோஃபி மோமன் கூறுகையில், “அனைத்து தோல் பராமரிப்பு தொடர்பான விஷயங்களையும் நான் கேள்வி பட்டு இருக்கிறேன்.

From around the web