ஸ்வீடனில் 50 ஆண்டுகளில் இல்லாத கனமழை.. தடம் புரண்டு ரயில் விபத்து!

 
Sweden

ஸ்வீடனில் பெய்த கனமழையால் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆற்றங்கரை மற்றும் மலைச்சரிவான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளளனர். அந்த நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், கிழக்கு ஸ்வீடனில் 100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதேபோல் அண்டை நாடான நார்வேயிலும் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Sweden

இரு நாடுகளிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்வதாகக் கூறப்படும் நிலையில் நார்வேயில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது.

From around the web