கமலா ஹாரிஸ்க்குதான் ஆதரவு.. வீடியோ வெளியிட்ட டைட்டானிக் நாயகன்!

 
Leonardo - kamala - trump

பிரபல ஹாலிவுட் முன்னணி நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இரு தரப்புக்கும் பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் பக்கம் தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸுக்கு பாடகி டெய்லர் ஷிப்ட் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனாலும் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.

Leonardo

இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற டைட்டானிக் பட நாயகன், ஹாலிவுட் முன்னணி நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், இந்த மாத தொடக்கத்தில் ப்ளோரிடா, ஜார்ஜியா, வட கரோலினா பகுதிகளில் ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளியால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதி சக்தி வாய்ந்த இந்த அட்லாடிக் சூறாவளியால் மக்கள் தங்களின் வீடுகளையும்  உறவுகளையும் இழந்துள்ளனர். 100 பில்லியன் டாலர் வரை சேதங்களை ஏற்படுத்திய இந்த அசாதாரணமான சூறாவளி காலநிலை மாற்றத்தின் விளைவே. ஆனால் டிரம்ப் காலநிலை மாற்றை தொடர்ந்து மறுக்கிறார்.

அறிவியலையே அவர் மறுக்கிறார். பாரிஸ் காலநிலை தீர்மானத்திலிருந்து அமெரிக்காவை அவர் பின்வாங்கச் செய்தார். காலநிலை மாற்றம் நமது பூமியையும் பொருளாதாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே  பாதுகாத்துக்கொள்ள நாம் செயலாற்றியாக வேண்டும். அதனால்தான் நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

From around the web