திடீரென குலுங்கிய ஜப்பான்.. இரவு நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.0 ஆக பதிவு!

 
Japan

ஜப்பானில் இன்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது.

பசிபிக் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் ஜப்பான் அமைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படுவது வழக்கம். இங்கு செசிமிக் செயல்பாடு அதிகம் இருப்பதால் எளிதாக நிலநடுக்கம் ஏற்படும். இதன் காரணமாக அடிக்கடி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

Earthquake

இந்த நிலையில் ஜாப்பானில் இன்று இரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் வடமேற்கில் சுமார் 208 கி.மீ. தொலைவில், தரைமட்டத்தில் இருந்து 68 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் உள்ள புகுஷிமா மாகாணத்தின் கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அங்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக கடந்த ஜனவரி 1-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web