ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள 2 நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
பசிபிக் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் ஜப்பான் அமைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படுவது வழக்கம். இங்கு செசிமிக் செயல்பாடு அதிகம் இருப்பதால் எளிதாக நிலநடுக்கம் ஏற்படும். இதன் காரணமாக அடிக்கடி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
அந்த வகையில் ஜப்பானில் 2 இடங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் நேற்று நள்ளிரவு 12.59 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது.
#BREAKING Preliminary 6.1 magnitude earthquake has struck Northern Japan. #earthquake pic.twitter.com/XPWhB6Hi5j
— CNW (@CANews_Watch) April 1, 2024
இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.