தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

 
Taiwan

தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

தைவானில் கடந்த 3-ம் தேதி 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியன் மலைப்பகுதியில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ஹுவாலியன் நகரின் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

Earthquake

இந்த நிலையில் இன்று மாலை 5.08 மணியளவில் மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகரான தைபேயிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) இதன் அளவை 5.5 ரிக்டர் என்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழத்தை 8.9 கிலோமீட்டர் என்றும் கணக்கிட்டு உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தில் இருந்து மீளாத மக்களுக்கு ஒரே மாதத்தில் 2வது நிலநடுக்கம் என்பதும் பெரும் அதிர்ச்சி கலந்த பயத்தை கொடுத்துள்ளது.


ஏப்ரல் 3-ம் தேதி நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மாலை பதிவான நிலநடுக்கம் பெரியது என்று AFP பத்திரிகையாளர் தெரிவித்தார். தைவான் இரண்டு பெரிய நிலத்தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web