பெரு நாட்டில் பெரும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.2 என பதிவு.. சுனாமி எச்சரிக்கை!

 
Peru

பெரு நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Peru

இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கதின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 


பசுபிக் பெருங்கடலில், காரவேலி மாகாணத்தில் அட்டிகிபா மாவட்டத்திற்கு மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிலி மற்றும் பொலிவியாவின் எல்லைகளுக்கு அருகில் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 300 மைல் தொலைவில் உள்ளது. இதன் ஆழம் 20 கிலோமீட்டர் ஆகும். இந்த நிலநடுக்கமானது அயகுச்சோ, இகா மற்றும் தலைநகரின் அருகிலுள்ள பகுதிகளில் உணரப்பட்டாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

From around the web