இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.5 ஆக பதிவு.. பரபரப்பு வீடியோ

 
Indonesia

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.

தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ‘ரிங் ஆப் பயர்’ மீது இருப்பது காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.

Earthquake

இந்த நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளதாகவும், இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இல்லை எனவும் அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் மையம் கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தலைநகர் மற்றும் அருகில் உள்ள பான்டென் மாகாணம் மற்றும் மத்திய ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களிலும் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அமைப்பால் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web