சீன சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து.. 3 பேர் பரிதாப பலி!

 
China

சீனாவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவம் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஒருவர் கத்தியால் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற சிலருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் 15 பேர் காயமடைந்தனர். 

Knife

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் நடத்தியவர் லின் என்ற குடும்பப்பெயர் கொண்ட 37 வயதுடைய நபர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் தனிப்பட்ட நிதி சுமையால் பாதிக்கப்பட்டு தனது கோபத்தை வெளிப்படுத்த ஷாங்காய்க்கு பயணம் செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. 

china

இதற்கிடையே, சீனாவின் 75வது தேசிய தினத்தை வார விடுமுறையுடன் இன்று கொண்டாட நகரம் முழுவதும் தயாராகி வரும் நிலையில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web