இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்.. அனுர குமார திசநாயக்க - சஜித் பிரேமதாச இடையே கடும் போட்டி!

 
Srilanka

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகிக்கிறார்.

இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பின்பு அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 60  சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. பொதுவாக இலங்கை அதிபர் தேர்தலில் வன்முறைகள் அதிகம் நிகழும். இம்முறை அப்படியான வன்முறை எதுவும் இடம்பெறவில்லை. அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கியது. அதிகாலை 12 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின.

Srilanka

வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அநுர குமார திஸாநாயக்க முன்னணியில் இருக்கிறார்.

தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அநுர குமார திஸாநாயக்க தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

Srilanka

இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அனுர குமார திசநாயக்க 39.52 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 17.41 சதவீத வாக்குகள் பெற்று பின்னடைவு அடைந்துள்ளார். சஜித் பிரேமதாச 34.28 சதவீத வாக்குகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஒருவேளை, யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த அதிபர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

From around the web