ட்ரம்ப் பதவியேற்பில் இத்தனை தலைவர்களா? பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக அமைச்சர் ஜெய்சங்கர்!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். விழாவில் முன்னாள் அதிபர்கள் பில் க்ளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா கலந்து கொண்டார்கள். டெக்னாலஜி நிறுவன தலைவர்கள், தலைமை அதிகாரிகளான ஃபேஸ்புக் மார்க் சக்கர்பர்க், அமேசான் ஜெப் பெஸோஸ், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளத்தின் எலன் மஸ்க், கூகுள் சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் முதன் முறையாக வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள் விவரம் வருமாறு,
1. அர்ஜண்டினா அதிபர் ஜேவியர் மிலேய்
2. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி
3. சீனா அதிபரின் பிரதிநிதியாக சீனா துணை அதிபர் ஹன் செங்
4. ஈக்குவடார் அதிபர் டேனியல் நோபா
5.பராகுவே அதிபர் சாண்டியாகோ பெனா
6. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்
7. ஃப்ரான்ஸ் அரசியல்வாதி எரிக் செம்மோர்
8. ஃப்ரான்ஸ் அரசியல்வாதி மரியோன் மரெச்சல்
9. ஸ்பெயின் வோக்ஸ் கட்சியின் சாண்டியாகோ அபஸ்கல்
10.பெல்ஜியம் வ்லாம்ஸ் பெலங்க் கட்சியின் டாம் வேன் க்ரேக்கென்
11.ஜெர்மனி மாற்றுக் கட்சி இணை நிறுவனர் டினோ ச்ருப்பலா
12. போலந்து முன்னாள் பிரதமர் மேட்டஸ் மொராவியேக்கி
13. இந்தியப் பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
உள்ளிட்ட பல்வேறு நாட்டின் பிரதமர், அதிபர், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
ட்ரம்ப் க்கு உற்ற நண்பனாக இருந்த பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்காமல் இருந்தது மோடி ஆதரவாளர்களான அமெரிக்க இந்தியர்களை சற்று சோர்வடையச் செய்துள்ளது என்பது உண்மையே. தேர்தல் நேரத்தில் ட்ரம்ப் அழைப்பை பிரதமர் மோடி ஏற்காமல் வந்ததே, அவருக்கு அழைப்பு அனுப்பாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.