கீழே விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்.. 5 உடல் கருகி பலியான சோகம்!

 
Arizona

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா விமான நிலையத்தில் ஹோண்டா HA-420 ரக ஜெட் விமானம் நேற்று மாலை 4.40 மணியவில் புறப்பட முயன்றபோது விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி, அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

Arizona

விமானம் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதில், 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் தீயில் கருகி உயிரழிந்தனர். இதில், விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல் துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், அரிசோனாவைச் சேர்ந்த ஸ்பென்சர் லிண்டால் (43), ரஸ்டின் ராண்டால் (48), ட்ரூ கிம்பால் (44) மற்றும் கிரஹாம் கிம்பால் (12) என அடையாளம் காணப்பட்டனர். 


இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்தாவது நபர் உயிர் தப்பியதாகவும், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

From around the web