காதலியை சுட்டுக்கொன்ற சீக்கிய வாலிபர்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Roseville

அமெரிக்காவில் கார் பார்க்கிங்கில் சீக்கிய வாலிபர் தனது காதலியை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ரோஸ்வில்லே பகுதியில் வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய வாலிபர் (29) ஒருவர் தனது காதலியுடன் (34) தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார்.

Gun

இதுகுறித்து வெளியான செய்தி அறிக்கையில், சிம்ரன்ஜித் சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு புதிய சட்டையை போட்டு கொண்டு, பழைய சட்டையை தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.

துப்பாக்கி சூடு நடந்தது தெரிய வந்ததும், அந்த பகுதியில் ஊரடங்கு நிலை ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி குற்றவாளியை தேடி வந்தனர். ஆனால் சிம்ரன்ஜித் சிங், வணிக வளாகத்தில் இருந்து வெளியே போக வேண்டும் என கூறியுள்ளார்.

Roseville

சாட்சிகள் மற்றும் கடைசியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர் சென்ற திசை உள்ளிட்ட பிற விவரங்கள் ஆகியவற்றை கொண்டு போலீசார், சிங்கை தேடி வந்தனர். இதன்பின் சிசிடிவி கேமரா உதவியுடன் சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

From around the web