வாக்-இன் ஓவனில் சடலமாக கிடந்த சீக்கிய பெண்.. கனடாவில் பரபரப்பு சம்பவம்!

கனடாவில் வால்மார்ட்டில் வாக்-இன் ஓவனுக்குள் 19 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தின் ஹாலிஃபாக்ஸ் நகரில் வால்மார்ட் ஸ்டோர் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஸ்டோரில் 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பெண் கடந்த சனிக்கிழமை அன்று வால்மார்ட் ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்-இன் ஓவனில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்களை தெரிவிக்கவில்லை.
வால்மார்ட் கனடாவின் செய்தித் தொடர்பாளர் அமண்டா மோஸ் கூறுகையில், ஊழியரின் மரணம் நிறுவனம் மிகவும் வருத்தமடைகிறது. சிபிஎஸ் செய்திக்கு அளித்த அறிக்கையில், மேலதிக விசாரணைக்கு அனுமதிக்கும் மற்றும் பணியாளர்கள் நிலைமையைச் செயலாக்க அனுமதிக்கும் வரை கேள்விக்குரிய கடை மூடப்பட்டிருக்கும் என்று கூறினார்.
மேலும், நாங்கள் மனம் உடைந்துள்ளோம், எங்கள் ஆழ்ந்த எண்ணங்கள் எங்கள் கூட்டாளி மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. எங்கள் கூட்டாளிகளை கவனித்துக்கொள்வதிலும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை உறுதி செய்வதிலும் எங்கள் கவனம் உள்ளது என்று கூறினார்.
கனடா ஊடகங்களின்படி, அந்தப் பெண் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக அடையாளம் காணப்பட்டார், அவர் சமீபத்திய ஆண்டுகளில் தனது தாயுடன் கனடாவுக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து கடல்சார் சீக்கிய சங்கத்தின் செயலாளர் பல்பீர் சிங் கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம், இதனால் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் போலீஸ் விசாரணை வெளிவரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.