பிடியாணை வழங்க சென்றபோது துப்பாக்கிச்சூடு.. 3 போலீசார் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு

 
Charlotte

அமெரிக்காவில் பிடியாணை வழங்க சென்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 போலீசார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த நபர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததற்காக போலீசார் பிடியாணை வழங்க சென்றனர். அப்போது சந்தேக நபர் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த திடீர் தாக்குதலில் 3 அமெரிக்க மார்ஷல்கள் கொல்லப்பட்டனர்.

Charlotte

மேலும் 5 சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தப்பியோடினார். இதையடுத்து, தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து CMPD தலைவர் ஜானி ஜென்னிங்ஸ் கூறுகையில், “சார்லொடி நகரத்திற்கும், சட்ட அமலாக்கத் துறைக்கும் இன்று ஒரு முழுமையான சோக நாள். இன்று நாம் நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் சில ஹீரோக்களை இழந்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.

Charlotte

மேலும் அவர் கூறுகையில், “அதிகாரிகள் துப்பாக்கிச்சூடுகளை சந்தித்தனர். ஆனால், அவர்கள் திருப்பி தாக்கினர். பின்னர் சந்தேக நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்” என்றார். இச்சம்பவம் வட கரோலினாவில் பாரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web