கமலா ஹாரிசின் அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு.. அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு

 
Kamala Harris

அமெரிக்காவில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. பின்னர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.

அதனை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) அறிவிக்கபட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ம் தேதி நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையில் அனல்பறக்கும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

Arizona

இந்நிலையில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ-ப்ரீஸ்ட் டிரைவ் அருகே உள்ள கமலா ஹாரிசின் பிரச்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம் மீது நள்ளிரவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Arizona

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web