அரிசித் தட்டுப்பாடு! கலிபோர்னியாவில் நவீனக் கொள்ளை?

 
USA

அமெரிக்காவில் அரிசி மூட்டைகள் வேண்டும் என்றால் மளிகை பொருட்களை வாங்க வேண்டும் என இந்திய சூப்பர் மார்க்கெட்டுகள் இந்தியர்களை நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது அரிசி உள்ளிட்ட அத்தியாவசி பொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்த நிலையில் விலைவாசியை கட்டுக்குள் வைத்து கொள்ளவும், அரிசி பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கவும் ஒன்றிய அரசு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

தக்காளி, காய்கறிகளின் விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கடந்த ஒராண்டில் மட்டும் 11.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் 3 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது.

USA

இந்தியாவில் இனி தொடர்ந்து பண்டிகை காலம் வர உள்ளதால் அரிசியின் தேவை அதிகரிக்கும். இதன் விளைவாக மேலும் அரிசியின் விலை உயர வாய்ப்புள்ளது. விலை உயர்வை தவிர்க்கவும், விலை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் அரிசி பைகளை வாங்கிச் செல்லும் வீடியோ வெளியானது. பல சூப்பர் மார்க்கெட்டுகள் தற்போதே அரிசி இருப்பு இல்லை என வெறும் கையை காட்டி வருகிறார்களாம். இன்னும் சில சூப்பர் மார்கெட்டுகள் ஒரு நபருக்கு ஒரு 5 கிலோ அரிசி பைதான் வழங்க முடியும் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

USA

அரிசித் தட்டுப்பாடும் வாங்குவதற்கு போட்டா போட்டியும் நடப்பதால், அமெரிக்காவில் உள்ள இந்தியக்கடைகள் புதுப்புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு கடையில் 40 டாலருக்கும் மேலாக அரிசி அல்லாத பிற பொருட்களை வாங்கினால் தான் ஒரு பை அரிசி விற்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது நவீனக் கொள்ளை என்று உள்ளூர்வாசிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் நடுநிலை இந்தியர்கள் பிரதமர் மோடி மீது கடும் கோபத்துடன் இருப்பதாகவும் தெரிகிறது.

From around the web