கனடாவில் துப்பாக்கி சூடு சம்பவம்.. 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி!

 
canada

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கின்றது. இதுகுறித்து சால்ட் மேரி போலீசார் கூறும்போது, 2 வீடுகளில் அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். முதலில் வந்த தொலைபேசி அழைப்பின்படி போலீசார் சென்று விசாரணை நடத்தியதில், தான்கிரெட் தெருவில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்து காணப்பட்டார்.

canada

தொடர்ந்து 10 நிமிடங்களில் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்படி சென்று பார்த்தபோது, துப்பாக்கி சூட்டிற்கான காயங்களுடன் 45 மதிக்கத்தக்க நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். அதனுடன், 6 மற்றும் 12 வயதுடைய 2 பேரின் உடல்களும் காணப்பட்டன. அவர்களும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர் என கூறினர்.

இதன்பின், 44 வயது கொண்ட மற்றொரு நபரின் உயிரற்ற உடலும் கைப்பற்றப்பட்டது. அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருப்பது போன்று தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

gun

இந்த மரணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று போலீசார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் ஒட்டாவாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில்  6 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடித்தக்கது.

From around the web