அமெரிக்காவில் வெற்றிக் கொண்டாட்ட விருந்தில் துப்பாக்கிச்சூடு.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 பேர் பலி!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, இந்த வெற்றியை கொண்டாட லெக்சிங்டன் பகுதியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 200 முதல் 300 பேர் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில அப்போது அங்கு அந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இருவர் மற்றும் 25 வயதுடைய நபர் என 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.