அதிர்ச்சி.. பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து.. 20 பேர் பலி!

 
Bangladesh

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை புறப்பட்டது. பைரப் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக டிராக் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Bangladesh

எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று தண்டவாளத்தில் மெல்ல மாறிக்கொண்டிருந்தபோது திடீரென அந்த தண்டவாளத்தில் சரக்கு ரயில் வேகமாக வந்தது. எக்ஸ்பிரஸ் ரயில் முழுமையாக மாற்று தண்டவாளத்திற்கு செல்வதற்கு முன் அதில் சரக்கு ரயில் வந்தது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதியது. 

இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 


இந்த விபத்தை அடுத்து இந்த பாதையில் நாட்டின் பிற பகுதிகளுக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் பலர் ரயிலுக்கு அடியில் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பைரப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web