அதிர்ச்சி.. தான்சானியாவில் 8 குழந்தைகள் பலி.. 78 பேருக்கு உடல்நிலை பாதிப்பு.. ஆமைக்கறியை சாப்பிட்டதால் நிகழ்ந்த சோகம்!

 
Turtle

தான்சானியாவில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரக்கா நாடான தான்சானியவின் பெம்பா என்ற தீவில் சுவை மிகுந்த உணவு பதார்த்தமாக ஆமை இறைச்சி இருந்து வருகிறது. பெம்பா தீவு மக்கள் ஆமைக்கறி சாப்பிட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்கு சிலர் ஆமைக்கறியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனால் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Sea

இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறுகையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) இந்த சம்பவம் நடந்தபோதும், அதிகாரிகளுக்கு பயந்து இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. சம்பவத்தில், முதியவர்களில் 78 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதேசமயம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான்சானியாவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த மாபியா தீவில் வேணி கிராம பகுதியில், கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

dead-body

சம்பவம் தொடர்பில் வேணி கிராமத்தின் தலைவர் ஜுமா கதிபு கூறுகையில், மீனவர்களிடம் இருந்து கடல் ஆமை கறியை வாங்கி அவர்கள் சாப்பிட்டு உள்ளனர். அது விஷம் நிறைந்தது என சந்தேகிக்கப்படுவ்தாகவும் அவர் தெரிவித்திருந்தார். நச்சுத்தன்மை வாய்ந்த உணவை ஆமைகள் சாப்பிட்டதால், அதனை சாப்பிட்டவர்கள் விஷத்தின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக ஆமை பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

From around the web