குலுங்கிய பிலிப்பைன்ஸ்.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அச்சத்தில் உறைந்துபோன மக்கள்!! அதிர்ச்சி வீடியோ

 
Philippines

பிலிப்பைன்சில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

பிலிப்பைன்சின் மிண்டனாவ் தீவில் தாவோ டி ஓரோ மாகாணத்தில் உள்ள மரகுசன் நகராட்சியின் அருகே இன்று மதியம் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Philippines

ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்டத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் ஆங்காங்கே சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் இல்லாமல் சேதங்களைச் சரிசெய்யச் சிறிது தாமதமாகுவது தெரிகிறது. மேலும் கடந்த வாரம் இது போன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, நேற்றும் கூட நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அந்நாட்டுப் புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் துருக்கி - சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web