நடனமாடிய பள்ளி மாணவி.. கல்வி உதவித்தொகையை ரத்து செய்த பள்ளி நிர்வாகம்... நடந்தது என்ன?

 
Kaylee Timonet

அமெரிக்காவில் நடனமாடிய காரணத்தினால் கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை பள்ளி நிர்வாகம் ரத்து செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள வாக்கர் மேல்நிலைப் பள்ளியில் சீனியர் வகுப்பில் படித்து வருபவர் கைலே டிமோனெட் (17). விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்த மாணவி, நண்பரோடு சேர்ந்து நடனமாடியுள்ளார். ஆனால் அந்த நண்பரோ கொஞ்சம் மோசமாக பாலியல் ஆசையை தூண்டும் வகையில் நடனமாடியுள்ளார். இவை அனைத்தும் வீடியோவாக எடுத்து யாரோ ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

Kaylee Timonet

இந்த வீடியோவைப் பார்த்த பள்ளி நிர்வாகம், அந்த மாணவியின் வகுப்பு லீடர் ரோலை பிடுங்கியதோடு மட்டுமல்லாமல் அவரது கல்வி உதவிதொகை விண்ணப்பத்தையும் நிராகரித்துவிட்டது. என்னுடைய வாழ்க்கையே முடிந்து போய்விட்டதாக நினைக்கிறேன். பள்ளியில் படிப்பதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். படிப்பிலும் நான் மோசமில்லை. 

இந்த வருடம் நான்தான் பள்ளியின் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காகவாவது எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் அல்லவா. வரும் ஜனவரியிலிருந்து நான் கல்லூரியில் சேர வேண்டும். டிசம்பர் மாதம் பள்ளி முடியப் போகும் நிலையில், உண்மையிலேயே இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என வேதனையோடு கூறுகிறார் டிமோனெட்.

டிமோனெட்டின் தாய் ரேச்சல் இதுதொடர்பாக பள்ளியின் பிரின்சிபலை சந்தித்து பேசியிருக்கிறார். தனது மகளின் கடவுள் நம்பிக்கை குறித்து கேள்வி கேட்க பள்ளி நிர்வாகத்திற்கு எப்படி உரிமையுள்ளது என்றும் இவர் கேட்டுள்ளார். இதற்கிடையில் நடனமாடிய குற்றத்திற்காக இவ்வுளவு பெரிய தண்டனையா என பல மாணவர்களும் டிமோனெட்டுக்கு ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளனர்.

From around the web