தாய்லாந்தில் நடுவழியில் தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து.. 23 மாணவர்கள் பலி.. அதிர்ச்சி வீடியோ!

 
Thailand

தாய்லாந்தில் கல்வி சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே உத்தை தனி மாகாணத்தில் உள்ள பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 44 பேர் இருந்துள்ளனர். கல்வி சுற்றுலாவுக்காக அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். எனினும், அவர்கள் சென்று சேர வேண்டிய இடம் என்னவென தெரியவில்லை.

Thailand

இந்த சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் 6 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அந்த பேருந்தில், கு கோட் நகரில் ஜீர் ரங்சித் என்ற பகுதியருகே பஹோன் யோதின் சாலையில் சென்றபோது, திடீரென தீப்பிடித்தது. இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் பலர் பலத்த காயமடைந்து உள்ளனர்.

இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 25 மாணவர்கள் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பலியாகி இருக்ககூடும் என அஞ்சப்படுகிறது.


இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என போக்குவரத்து அமைச்சர் சூரியா கூறியுள்ளார்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷினவத்ரா இரங்கல் தெரிவித்து கொண்டார். இந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web