ரூ. 12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய யூடியூப் பிரபலம்.. அதிர்ச்சி தரும் வீடியோ!

 
Japan

விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட யூடியூப் பிரபலம் ஒருவருக்கு ஏற்பட்ட வினோத ஆசையால், உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

அறுவைசிகிச்சை செய்துகொள்வதும் மற்றும் அழகுசாதன சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதும் தங்களின் சிறந்த தோற்றத்தை மாற்ற விரும்பும் நபர்களுக்கு பொதுவானதாகிவிட்டது. ஜப்பானில் உள்ள ஒருவரும் தான் எப்போதும் விரும்பும் தோற்றத்தை அடைய இந்திய மதிப்பில் சுமார் 12 லட்ச ரூபாய் செலவழித்துள்ளார். இருப்பினும், அவர் ஒரு பிரபலமான தோற்றத்தை விரும்பவில்லை, அதற்கு மாறாக தன்னை ஒரு நாயாக மாற்றிக்கொண்டார்.

ஜப்பான் நாட்டில் வசித்துவரும் டோகோ ஈவி என்பவர் ‘ஐ வாண்ட் டூ பி அனிமல்‘ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் வளர்ப்பு விலங்குகளைக் குறித்த வீடியோக்களையும் தகவலையும் வெளியிட்டு வரும் நிலையில் அவருக்கு சிறு வயதில் இருந்தே நாய்கள் என்றால் மிகவும் பிரியம் என்றும் தான் ஒரு நாயாக பிறந்து இருக்கலாம் என்றும் கூறிவந்துள்ளார்.

Japan

இந்நிலையில் ஏன் தன்னை ஒரு நாயாக மாற்றிக்கொள்ளக் கூடாது என்று நினைத்த டோகோ, தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் டோகோவை அனுகியுள்ளார். இதையடுத்து டோகோவின் உருவத்தை முழுவதுமாக மறைத்து நாய் போன்றே இருக்கும் ஆடை ஒன்றை அந்த நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.

இவவாறு உருவாக்க 40 நாட்கள் ஆகியிருக்கிறது. இப்படி மனிதனாக இருக்கும் டோகோவை நாய் உருவத்திற்கு மாற்றுவதற்கு 22 ஆயிரம் யென் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் மேல் செலவிட்டுள்ளார்.

தத்ரூபமாக தெரியும் சிலைகள், உடைகள், 3-டி மாடல்கள் போன்றவற்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. டோகோ கூலி இனத்தை சேர்ந்த நாயை போல வடிவமைக்கப்பட்டு உள்ளார். இது நான்கு கால்களில் நடக்கும் உண்மையான நாயின் தோற்றத்தை உருவாக்குகிறது என்று ஜெப்பெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சொல்கிறார்.

அந்த நபர் தனது யூடியூப் சேனலில் முதல் முறையாக தான் நாய் உருவத்துக்கு மாறியிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் மிருகமாக இருக்க விரும்புகிறேன் என்ற தலைப்பில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ஜெர்மன் தொலைக்காட்சிக்காக ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

நாயாக மாறி உள்ள டோகோ, மற்றவர்கள் கொடுக்கும் போலி மரியாதையை விரும்பாததால், தனது மனித அடையாளத்தை மறைக்க விரும்பியதாகவும் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web