ரூ.5 ஆயிரம் கோடி சூதாட்ட மோசடி.. துபாயில் முக்கிய குற்றவாளி கைது!

சூதாட்ட செயலி மூலம் 5 ஆயிரம் கோடி மோடி செய்த இந்தியரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவர் தனது நண்பர் ரவி உப்பலுடன் சேர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்று அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதில் போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவின் வட மாநிலங்களில் இதில் பெட் கட்டிய லட்சக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர். சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை இந்த செயலி மூலம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை, கொல்கட்டா, போபால் உள்ளிட்ட 39 இடங்களில் சோதனை கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரசேகர் துபாயில் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து இன்று (அக்டோபர் 11) இன்டர்போல் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் சந்திரசேகர் இந்தியா அழைத்து வரப்படலாம் என்று அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.