கூகுளில் புரட்சிகரமான மாற்றம் வரும்! சுந்தர் பிச்சை தகவல்!!
இன்றைய ஸ்மார்ட் போன் உலகத்தில் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உடனே நாடுவது கூகுள் தேடுதல் தளத்தைத் தான். கூகுள் கூகுள் என்று பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே திரைப்படப் பாடலைக் கொண்டாடியவர்கள் தமிழர்கள். அந்த கூகுள் நிறுவனத்தின் தலைவராக ஒரு தமிழரே இருப்பது என்பது கூடுதல் சிறப்பு அல்லவா!
கூகுளைக் கொண்டாடும் நேரத்தில் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை தொழில்நுட்ப தளம் படுவேகமாக பரவலாகி வருகிறது. இந்தத் தளத்தில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு, மறுமுனையிலிருந்து ஒரு நபர் பதில் சொல்வது போல் பதில்கள் கிடைக்கும். பதிலிலிருந்து மீண்டும் ஒரு துணைக் கேள்வி கேட்கலாம், அதற்கும் விடை கிடைக்கும். ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபாட்டுடன் சாட் செய்து உரையாடுவது போன்ற அனுபவம் கிடைக்கும்.
சாட்ஜிபிடி யின் வளர்ச்சி கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் பார்வையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி திருப்பியுள்ளது. 2025ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தளமான OpenAI அமைப்பின் ஒருங்கிணைப்புடன் கூகுள் தளத்தில் பல முன்னேற்றகரமான மாற்றங்கள் வர உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
நியூயார்க் நகரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுந்தர் பிச்சை இதை தெரிவித்துள்ளார்.