விரைவில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்யலாம்.. எலான் மஸ்க் அறிவிப்பு

 
Elon-has-decided-not-to-join-our-board-tweets-Twitter-CEO

எக்ஸ் செயலி மூலம் விரைவில் பண பரிமாற்றம் செய்யலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

2006-ல் ஆரம்பிக்கப்பட்ட ட்விட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பதவி விலகினார்.

Twitter-confirms-sale-of-company-to-Elon-Musk

இதனை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதுமுதல் ஆட்குறைப்பு, எக்ஸ் என பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார்.

X

இதுகுறித்து எலான் மஸ்க் நிருபர்களிடம் கூறுகையில், “எக்ஸ் செயலி மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் (2024) நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்” எனக் கூறினார்.

From around the web