பிரதமர் மோடி சந்திப்பு! பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்!!

அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐ சந்தித்து இரு தரப்பு வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் ஆகியவை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா நீண்டகாலமாக கோரியிருந்த நிலையில், பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்துள்ளார் அதிபர் டர்ம்ப்.
பயங்கரவாதி தஹாவூர் ராணா மும்பை தாக்குதலில் தொடர்புடையவன். 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியான இந்த தாக்குதலை நடத்திவிட்டு அமெரிக்காவில் தஞ்சமடைந்தான் தஹாவூர் ராணா. இந்தியா அவனை நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து தடை கோரினான். இறுதியாக அமெரிக்க உச்சநீதிமன்றமும் அவனுடைய மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அமெரிக்கா வந்திருக்கும் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அதிபர் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட மிகவும் ஆபத்தான ஒருவரை நாங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்" என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். ராணுவ விமானத்தில் கை மற்றும் கால் விலங்குகளுடன் இந்தியர்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், பயங்கரவாதியை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது அமெரிக்கா.