அமெரிக்காவில் பிரதமர் மோடி! சரமாரியாக வரி விதிக்கும் அதிபர் ட்ரம்ப்!!

இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்- ஐ சந்தித்த அதே நாளில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி விதிப்பை அதிகரிக்கும் ஆணை மீது கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணையின் படி, அமெரிக்கப் பொருட்களுக்கு வெளிநாடுகள் என்னென்ன வரி விகிதம் விதிக்கிறதோ, அதே வரி விகிதத்தை அந்த நாடுகளிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா 50 சதவீதம் வரி விதித்தால், இந்தியாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதிக்கும். எல்லா நாடுகளுக்கும் ஒரே விதி என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரியை குறைக்க வேண்டும் என்று கேட்பதற்கே வழி இல்லாமல் செய்து விட்டார் ட்ரம்ப். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் வரியைக் குறையுங்கள், உங்கள் பொருட்களுக்கு வரியை குறைக்கிறோம் என்ற ரீதியில் தான் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் என்ற வகையில் இந்த ஆணை அமைந்துள்ளது.
பிரதமர் மோடியின் வருகையால் இந்தியாவுக்கு தனிச்சலுகை வழங்குவாரா அதிபர் ட்ரம்ப்?