அதிபர் ட்ரம்ப்பின் டெஸ்லா கார் விற்பனைக்கு.. விலை வெறும் ரூ.5 ஆயிரத்து 800 மட்டுமே!! இன்றைய அமெரிக்க அரசியல்!!

 
Trump Tesla

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு சமீபத்தில் வாங்கிய புத்தம் புதிய  டெஸ்லா காரை விற்பதாக அறிவித்துள்ளார். விலை வெறும் 69 டாலர்கள் மட்டுமே என்றும் கூறியுள்ளார். 

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அதிபர் ட்ரம்ப் க்கு ஆதரவாக முழு வீச்சில் தேர்தல்பணிகள் செய்தார். மேலும் மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்தார். இதற்குப் பரிசாக புதிய அரசில் நிர்வாகத் திறன் சீர்திருத்தத் துறை என்ற துறையை உருவாக்கி அதற்கு தலைவராக எலான் மஸ்க் ஐ நியமித்தார் ட்ரம்ப்.

எலான் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான அமெரிக்க மத்திய அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அலுவலகத்திற்கு கட்டாயம் வந்தாக வேண்டும் என்ற விதி பிறப்பிக்கப்பட்டது. எலான் மஸ்க்கின் நடவடிக்கைக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்களும், டெஸ்லா கார்களுக்கு தீ வைப்பு நிகழ்வுகளும் நடந்தது. டெஸ்லா கார்களின் மீதான விருப்பமும் வாடிக்கையாளர்களிடம் குறைந்தது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் -க்கும் எலான் மஸ்க் கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அரசு நிர்வாகத்திலிருந்து விலகினார் மஸ்க். அதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எக்ஸ் தளத்தில் சுமத்தி வருகிறார் எலான் மஸ்க். இதற்குப் பதிலாக தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூகத்தளத்தில் எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் ட்ரம்ப்.

அமெரிக்காவில் டெஸ்லா கார் உற்பத்தி நிறுத்தப்படும். இந்த பாம்பு என்னை முதுகில் குத்தி விட்டது. தேர்தல் நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வகையில் டெஸ்லா கார் வாங்கினேன். அதை உபயோகிக்கவில்லை. இப்போது அதை விற்பதற்கு முடிவுசெய்து விட்டேன். வெறும் 69 டாலர்கள் தான். அந்த கார் அவ்வளவு விலைக்குத் தான் போகும்.  இந்த பாம்பு என்னை முதுகில் குத்தி விட்டது. என்னுடைய நிர்வாகம் இருக்கும் வரையில் டெஸ்லா கார் அமெரிக்காவில் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று பேசியுள்ளார் ட்ரம்ப்.

From around the web