அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பு...அமெரிக்காவில் தமிழ்ப் படங்களுக்கு கட்டணம் இரட்டிப்பாகுமா?

 
Trump

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் சமூக வலைத் தளத்தில் அறிவித்துள்ளார்

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரச்சார பாணியில் இருப்பதாகவும் கூறியுள்ளார் அதிபர் ட்ரம்ப், அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் எண்ணத்தில் வெளிநாட்டுப் படங்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை ட்ரம்ப்  மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளி்யாகியுள்ளது.

இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்த வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அவர் அங்கீகாரம் அளித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்காவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் தமிழ்ப்படங்களுக்கு ஹாலிவுட் படங்களை விட இரட்டிப்பு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதிபர் ட்ரம்ப் பின் வரிவிதிப்பால் இந்த கட்டணம் மேலும் அதிகரிக்கும்.

ஓடிடி தளங்களில் வெகு விரைவாகவே புதிய படங்கள் வந்து விடுவதால் இன்னும் கட்டணம் அதிகமானால் அமெரிக்காவில் தமிழ்ப்படங்களுக்கு தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

From around the web