இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.2 ஆக பதிவு!

 
Srilanka

இலங்கைக்கு தெற்கே நடுக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Earthquake

இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் பக்கத்தில், கொழும்புவுக்கு தென் கிழக்கே 1,326 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12.31 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web