பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. பீதியில் மக்கள்!

 
philippines philippines

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.

‘பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ என்று அழைக்கப்படும் நிலநடுக்க அச்சுறுதல் அதிகம் காணப்படும் பூகோள அமைப்பில் உள்ள நாடு பிலிப்பைன்ஸ். இங்கு எரிமலை வெடிப்பு, புயல், நிலநடுக்கம் போன்றவை பெருமளவில் நடைபெறுவதால் தீவிர பேரிடர் பாதிப்புகளுக்கு ஆளாக சர்வதேச நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிலிப்னைன்ஸ் நாட்டில் மிண்டானோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்குள்ள பகுதிகள் அதிர்ந்தன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

Earthquake

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பிலிபைன்ஸ்சில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்கு உயிர்சேதமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர். இந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

முன்னதாக இந்தோனேசியாவின் கெபுலாவான் பாபர் பகுதியில் இன்று பிற்பகலில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்து வெளியிட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியதால் முதலில் இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

philippines

ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் ஒரு சில இடங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web