POVERTY BY AMERICA - அமெரிக்காவின் இன்னொரு பக்கம்!!
அமெரிக்காவை நாம் வளர்ந்த நாடு என்று நினைக்கிறோம். மக்களாட்சியின் விழுமியங்கள் மிக்க நாடு என்று நினைக்கிறோம். ஆனால், அதற்கு இன்னொரு பக்கமும் உண்டு.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற என் நண்பர்கள், "மச்சான், இங்க நம்ம ஊரைவிட ஏழைங்க இருக்காங்கடா..."னு வியந்து சொன்னார்கள்.
இப்போதும் அங்குள்ள அரசியல் ஆர்வமுள்ள நண்பர்கள் சொல்வது என்னவென்றால், தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டுக் காலம் திராவிட இயக்கம் பேசிப் பேசி அரசியல் விழிப்புணர்வை வளர்த்த அளவுக்கு, தெருவுக்குத் தெரு வீட்டுக்கு வீடு மக்களை அரசியல்படுத்திய அளவுக்கு அங்கு நிகழவில்லை என்கிறார்கள்.
அதன் தாக்கம், அமெரிக்க மக்களின் ஏழ்மையில் தெரிகிறது. Poverty, By America என்கிற இந்த நூலைப் படிக்கும்போது, நூலின் அடிநாதமாகத் திரும்பத் திரும்பத் தோன்றியது ஒன்று தான்:
தமிழர்களுக்குப் பள்ளியில் சத்துணவு தந்து, பசிப்பிணி நோக்கி, கல்வி, மருத்துவத்தை இலவசமாகத் தந்து, இன்று கல்லூரி செல்லும் மகளிருக்கு 1000 ரூபாய் முதல் 1 கோடி மகளிருக்கு மேல் மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை என்கிற பெயரில் தரப்படுகிற மக்கள்நல நடவடிக்கைகள் உலகளவில் கவனித்துச் சிறப்பிக்க வேண்டியது.
இதுவரை உலகை ஆண்ட மன்னர்கள், அரசுகள் மக்களிடமிருந்து தான் வரிப்பணம் வாங்கியுள்ளனவே தவிர, மக்களுக்கு ஒரு பைசா கூட திருப்பித் தர வேண்டும் என்று எண்ணியதில்லை.
திமுகவின் அரசியல், கொள்கை எதிரிகள் கூட, திமுக முன்னெடுத்த மகளிருக்கு உரிமைத் தொகை என்னும் திட்டத்தை இந்தியா முழுக்க விரிவுபடுத்திக் கொண்டிருப்பது திமுகவுக்கும் தமிழர்களுக்கும் நிச்சயம் பெருமை சேர்க்கும் வரலாற்று நிகழ்வு.
தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருந்திருந்தால் நிச்சயம் நம் தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் பொருளாதாரத்திற்காகவோ அமைதிக்காகவோ நோபல் பரிசு பெற்றிருக்க முடியும்.
Poverty, By America - கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
- ரவிசங்கர் அய்யாக்கண்ணு