நடுவானில் ஒளிபரப்பான ஆபாசப் படம்.. ஒன்றும் செய்ய முடியாமல் விழித்த விமான பயணிகள்!

ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணிகள் இருக்கைகளில் முன்னே உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் இருந்து ஜப்பானில் உள்ள ஹனேடா நகருக்கு கடந்த வாரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்னாஸ் QF59 விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. ஒருவொரு சீட் இருக்கைகளுக்கு முன்னே பயணிகள் பொழுதுபோக்குக்காக டிவி மாட்டப்பட்டிருக்கும்.
அதில் தங்களுக்கு விருப்பமான படங்களை பயணிகள் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஆனால் அன்றைய தினம் பயணிகளால் படங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக அனைவரின் திரைகளிலும் ஆபாசப் படம் ஒளிபரப்பாகியுள்ளது. அதைப் பயணிகள் PAUSE செய்து நிறுத்தவோ அல்லது மொத்தமாக ஆப் செய்வவோ முடியாமல் இருந்ததால் பலருக்கு அசவுகரியமான சூழல் ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் எண்டர்டெயின்மென்ட் சிஸ்டமில் ஏற்பட்ட தொழில்நுட்ப பழுது காரணமாக இது நடத்ததாக விமான ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளதுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் ஆபாசப் படம் ஓடிய பிறகே பழுது சரிசெய்யப்பட்டு வேறு படங்களை மாற்ற முடிந்திருக்கிறது.
Qantas has been left red-faced after accidentally playing an R-rated movie - to an entire plane - with no way for passengers to turn it off.
— 10 News First (@10NewsFirst) October 7, 2024
Watch 10's Late News tonight at 10:50pm for the full story. pic.twitter.com/FL7tIEkvPv
இது குறித்து விமானத்தில் பயணித்த சில பயணிகள் இணையத்தில் பேசியதை அடுத்து இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு கட்னாஸ் விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.