ஜூனியர் எலான் மஸ்க் "எக்ஸ்” ஐ சந்தித்த பிரதமர் மோடி!!

அரசுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி டெஸ்லா நிறுவனர் மற்றும் அமெரிக்க அரசு நிர்வாக சீர்த்திருத்தத் துறை தலைவர் எலான் மஸ்க் ஐ சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் விண்வெளி, தொழில்நுட்பம், புதிய தொழில் முயற்சிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய தொழில்நுட்பங்கள், திறம்பட்ட ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்தும் பிரதமர் மோடி எலான் மஸ்க் கிடம் பேசியதாக வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி எலான் மஸ்க்கின் குழந்தைகளுடன் இருக்கும் படமும் வீடியோவும் சமூகத்தளத்தில் பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் போது தனது மகன் “எக்ஸ்” ஐ தன்னுடைய கழுத்தின் இருபுறமும் உக்கார வைத்து அழைத்து வந்தார் எலான் மஸ்க்.
அதிபர் ட்ரம்ப் ஐ வெள்ளை மாளிகையில் சந்தித்து செய்தியாளர்களிடம் பேசிய போதும் அங்கே 4 வயது மகன் எக்ஸ் ஐ யும் உடன் அழைத்து வந்தார். பிரதமர் மோடியை சந்திக்க வந்த எலான் மஸ்க், மகன் ’எக்ஸ்’ உடன் , மகள் ’ஒய்’, மற்றொரு குழந்தை “தாவ்” ஆகிய மூன்று குழந்தைகளையும் அழைத்து வந்தார். குழந்தைகளுக்கு இந்தியாவிலிருந்து தருவித்திருந்த புத்தகங்களை வழங்கினார் பிரதமர் மோடி.
எக்ஸ் என்பதும் ஒய் என்பது எலான் மஸ்க் நிறுவனமான டெஸ்லா கார்களின் மாடல்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.